·
முதல்
தலைமுறை – 1940 to 1956 வெற்றிடக் குழாய்கள்:
வெற்றிடக் குழாய்களை (vaccum tube) மின்சுற்றிலும்,
காந்த உருளையை நினைவகமாகவும் பயன்படுத்திய கணிப்பொறிகளை முதல் தலைமுறை என்கிறோம். இவை
அளவில் பெரியதாகவும், அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தன.

இவற்றை இயக்க அதிக அளவு மின்சாரம் தேவைப்பட்டது.
அதிக அளவு வெப்பம் உருவானதால் கணிப்பொறியின் பாகங்கள் அடிக்கடி பழுதுப்பட்டன. இவை கணிப்பொறி
மொழியில் மட்டுமே செயல்பட்டன. தகவல்கள், துளைஅட்டைகள் மற்றும் காகித நாடாக்கள் மூலம்
உள்ளீடு செய்யப்பட்டன. வெளியீடுகள் அச்சுப்பொறி வழியாக அச்சிடப்பட்டு வெளிவந்தன.
இந்தக் கணிப்பொறிகள் ஒரு சமயத்தில் ஒரு கணிப்பை மட்டுமே செய்யும் திறன் பெற்றவை.யுனிவர்சல் ஆட்டோமேடிக் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் நீயூமரிகல் இண்டக்ரேடர் அண்ட் கால்குலேட்டர் குறிப்பிடத்தக்க முதல் தலைமுறைகள்.
No comments:
Post a Comment