Wednesday, 23 May 2012

Ctrl+0 = சேர்க்கிறது அல்லது ஒரு பத்தி முன் இடைவெளிகள் 6pts நீக்குகிறது 
                Adds or removes 6pts of spacing before a paragraph

Wednesday, 16 May 2012

நான்காம் தலைமுறை 1971 – இன்றுவரை நுண்செயலி Fourth Generation Computers






·         நான்காம் தலைமுறை(4த) 1971 – இன்றுவரை நுண்செயலி 
            Fourth Generation Computers (4G)


              பலப்பல ஒருங்கமை சுற்றுகளை ஒரே சில்லில் உள்ளடக்கி நுண்செயலிகள் உருவாக்கப்பட்டன. இவை கணிப்பொறியின் திறனை ஒரு புதிய நிலைக்கும் கொண்டு சென்றன. மேலும் கணிப்பொறிகளை இணைத்து வளைகள் உருவாக்கப்பட்டன. இதனால் கணிப்பொறிகளின் கூட்டுச் செயல்பாடு தொடங்கியது. இந்த கூட்டுறவின் அளவற்ற பயனால் இன்றைய இணையம் உருவானது.




            

மூன்றாம் தலைமுறை 1964 – 1971 ஒருங்கமை சுற்றுகள் Third Generation Computers


·         மூன்றாம் தலைமுறை 1964 – 1971 ஒருங்கமை சுற்றுகள்



            பல டிரான்சிஸ்களைக் குறுக்கி ஒரே சில்லில் அடக்கி உருவாக்கப்பட்டவை ஒருங்கமை சுற்றுகள். இவை கணிப்பொறியின் திறனையும், வேகத்தையும் மிகவும் அதிகப்படுத்தி ஒரு தலைமுறை மாற்றத்தையே ஏற்படுத்தின. மேலும் விசைப்பலகையும், திரைச் சாதனமும் உள்ளீட்டு, வெளீயீட்டுச் சாதனங்களாகா வந்தன. கணிப்பொறியின் பகுதிகளையும் நிர்வகிக்கும் இயக்க அமைப்புகள் தோன்றின. இதனால் பல கணக்குகளுக்கு ஒரே சமயத்தில் காண முடிந்தது.

இரண்டாம் தலைமுறை 1956 – 1963 டிரான்சிஸ்டர் Second Generation Computers Transistor


·         இரண்டாம் தலைமுறை 1956 – 1963 டிரான்சிஸ்டர்:-
            வெற்றிடக் குழாய்களுக்கும் பதிலாக டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்பட்டது. இதனால் அளவும், தேவையான மின்சாரமும் குறைந்தது. டிரான்சிஸ்டரும் அதிக வெப்பத்தை வெளீயிட்டதால் கணிப்பொறி சில சமயங்களில் தவறாகச் செயல்பட்டது. ஆனால் முந்தைய தலைமுறையிலிருந்து பெருமளவு முன்னேறியிருந்தது.
            இதில் உள்ளீட்டிற்க்கு துளை அட்டைகளும், வெளியீட்டிற்க்கு அச்சுப்பொறிகளும் பயன்பட்டன. கணிப்பொறி மொழியிலிருந்து அசெம்பிளி மொழிக்கு முன்னேறியது. இதில் கட்டளைகள் சிறு சொற்கள் மூலம் கொடுக்கப்பட்டன.

            இந்தக் காலக்கட்டத்தில்தான் கோபால், ஃபோர்ட்ரான் போன்ற உயர்நிலை மொழிகளின் தொடக்க பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இந்தத் தலைமுறையில் நினைவகத்திற்கு காந்த வளையங்கள் பயன்படுத்தப்பட்டன. தரவுகளை மட்டுமில்லாமல், கட்டளைகளையும் நினைவகத்தில் வைக்கும் தொழில் நுட்பம் அறிமுகமானது.

முதல் தலைமுறை – 1940 to 1956 First Generation Computers


·         முதல் தலைமுறை – 1940 to 1956 வெற்றிடக் குழாய்கள்:
            வெற்றிடக் குழாய்களை (vaccum tube) மின்சுற்றிலும், காந்த உருளையை நினைவகமாகவும் பயன்படுத்திய கணிப்பொறிகளை முதல் தலைமுறை என்கிறோம். இவை அளவில் பெரியதாகவும், அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தன.
            இவற்றை இயக்க அதிக அளவு மின்சாரம் தேவைப்பட்டது. அதிக அளவு வெப்பம் உருவானதால் கணிப்பொறியின் பாகங்கள் அடிக்கடி பழுதுப்பட்டன. இவை கணிப்பொறி மொழியில் மட்டுமே செயல்பட்டன. தகவல்கள், துளைஅட்டைகள் மற்றும் காகித நாடாக்கள் மூலம் உள்ளீடு செய்யப்பட்டன. வெளியீடுகள் அச்சுப்பொறி வழியாக அச்சிடப்பட்டு வெளிவந்தன.






 இந்தக் கணிப்பொறிகள் ஒரு சமயத்தில் ஒரு கணிப்பை மட்டுமே செய்யும் திறன் பெற்றவை.யுனிவர்சல் ஆட்டோமேடிக் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் நீயூமரிகல் இண்டக்ரேடர் அண்ட் கால்குலேட்டர் குறிப்பிடத்தக்க முதல் தலைமுறைகள்.
            

Friday, 27 April 2012

கணிப்பொறியின் வரலாறு

கணிப்பொறியின் வரலாறு:
·         கி.மு. 2500 – அபாகஸ்:-
            எண் கணிதத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கருவி அபாகஸ் எனலாம். இதில் நூலிழைகளும், அவற்றில் மணிகளும் இருக்கும். ஒவ்வொரு இழையும் ஒரு பதின்ம (தசம) நிலையையும், ஒவ்வொரு மணியும் ஒரு பதின்ம இலக்கத்தையும் குறிக்கும். நடுவில் உள்ள சட்டத்தின் அருகில் உள்ள மணிகள் ஒரு எண்ணைக் குறிக்கும். முதலில் அபாகஸ் கூட்டலுக்கும் கழித்தலுக்கும் பயன்பட்டது. பின்னர்  பெருக்கலுக்கும், வகுத்தலுக்கும் விரிவாக்கப்பட்டது.
·         கி.பி. 1614 - நேப்பியர் குச்சிகள்:-
            பெருக்கலை விரைவாகச் செய்ய உதவும் சாதனம் இது. ஜான் நேப்பியர் (John Napier) என்னும் ஸ்காட்லாந்துக்காரரால் உருவாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு இலக்கத்திற்கும் ஒரு குச்சி இருக்கும். இந்தக் குச்சிகளை தேவையான பெருக்கலுக்கு ஏற்றது போல் அடுக்கி வைத்தால் பெருக்கலை விரைவாகச் செய்யலாம்.
·         கி.பி.1633 – நகரும் சட்டம்:-
            “வில்லியம் ஆட்ரெட்” (William Outhtned) என்பவர் இதனை உருவாக்கினார். இதனை ‘லாகரிதம்’ (Logarithm) என்பதன் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் இருபுறங்களில்  நிலைத்த சட்டங்களும், நடுவில் ஒரு நகரும் சட்டமும் உள்ளது. இதனை பயன்படுத்தி பெருக்கலையும், வகுத்தலையும், கூட்டல், கழித்தல் போன்று செய்யலாம்.
·         கி.பி. 1642 – சுழல் சக்கரக் கணிப்பான்:-
            இது “பிளேய்ஸ் பாஸ்கல்” (Blaise Pascal)  என்னும் பிரெஞ்சு அறிஞரால் வடிவமைக்கப்பட்டது. இன்றைய கணிப்பொறிக்கு முன்னோடி எனலாம். இதில் நெம்பிகளும் வேகமாற்றிகளும் (Levers and Gears) இருந்தன. தன் தந்தையின் கணிப்புகளை விரைவுபடுத்த பாஸ்கல் இதை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பதுதான்.
·         கி.பி. 1822 – டிஃபரன்ஸ் என்ஜீன்:-
            இது “சார்லஸ் பாபேஜ்” (Charles Babbage)  என்னும் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இவர் கணிதம் மற்றும் பொறியியல் துறைகளில் அறிஞர். இன்றைய கணிப்பொறியின் அடிப்படைத் தத்துவங்களைத் உருவாக்கியதால் இன்றைய கணிப்பொறியின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
·         கி. பி. 1890 – ஹோல்ரித் டேபுலேடிங் மிஷின்
            துளையிடப்பட்ட அட்டைகளைப் பார்த்து அவற்றில் உள்ள தகவல்களைப் படித்து, அவற்றை அலசி ஆராயும் தன்மை படைத்தது இந்தக் கருவி.