·
இரண்டாம்
தலைமுறை 1956 – 1963 டிரான்சிஸ்டர்:-
வெற்றிடக் குழாய்களுக்கும் பதிலாக டிரான்சிஸ்டர்
பயன்படுத்தப்பட்டது. இதனால் அளவும், தேவையான மின்சாரமும் குறைந்தது. டிரான்சிஸ்டரும்
அதிக வெப்பத்தை வெளீயிட்டதால் கணிப்பொறி சில சமயங்களில் தவறாகச் செயல்பட்டது. ஆனால்
முந்தைய தலைமுறையிலிருந்து பெருமளவு முன்னேறியிருந்தது.
இதில் உள்ளீட்டிற்க்கு துளை அட்டைகளும்,
வெளியீட்டிற்க்கு அச்சுப்பொறிகளும் பயன்பட்டன. கணிப்பொறி மொழியிலிருந்து அசெம்பிளி
மொழிக்கு முன்னேறியது. இதில் கட்டளைகள் சிறு சொற்கள் மூலம் கொடுக்கப்பட்டன.
இந்தக் காலக்கட்டத்தில்தான் கோபால், ஃபோர்ட்ரான்
போன்ற உயர்நிலை மொழிகளின் தொடக்க பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இந்தத் தலைமுறையில் நினைவகத்திற்கு
காந்த வளையங்கள் பயன்படுத்தப்பட்டன. தரவுகளை மட்டுமில்லாமல், கட்டளைகளையும் நினைவகத்தில்
வைக்கும் தொழில் நுட்பம் அறிமுகமானது.